ADVERTISEMENT

“அன்று திமுக செய்ததையே எடப்பாடி பதவி வெறிக்காக இன்று செய்துவிட்டார்” - டி.டி.வி. தினகரன் பேட்டி

07:01 PM Mar 24, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

துரோகம் செய்தவர்களுக்கு மக்களும், தொண்டர்களும் விரைவில் தீர்ப்பு தருவார்கள் என அமமுகவின் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''ஒரு சிலரின் ஆணவத்தால், அகங்காரத்தால், பண திமிரால் ஜெயலலிதாவுடைய இயக்கம் மிகவும் பலவீனப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு சில சுயநலவாதிகளால் தமிழ்நாடு பாழடைந்து விட்டது. அவர்கள் செய்த தவறுகளால்தான் தீய சக்தி திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இன்று தவறான நடவடிக்கையில் சட்டசபையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவினுடைய தொண்டர்கள் சுயநலத்தால் நடைபெறும் பதவி சண்டைகளை பார்த்து எல்லோரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அமமுக என்பதை உணருகின்ற காலம் விரைவில் வரும். துரோகிகள் பற்றி டெல்லியில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வார்கள். துரோகிகளை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.

திமுக 1967 ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் முதலமைச்சராக வருவதற்கும் காரணமாக இருந்தவர் எம்ஜிஆர்தான். அவரையே கலைஞர் ஆணவப்போக்கில் கட்சியை விட்டு வெளியேற்றினார். அவர்களும் இதேபோல் பொதுக்குழு என்று 2,000 பேரை வைத்துக்கொண்டு பல லட்சம் தொண்டர்களை தாண்டி அவர்கள் விருப்பத்திற்கு மாறாக எம்ஜிஆரை திமுகவில் இருந்து நீக்கினார்கள். தனக்கு ஏற்பட்ட அநீதிக்காக, துரோகத்திற்காகத்தான் அவரை எதிர்த்து அதிமுகவை ஆரம்பித்தார் எம்ஜிஆர். அதனால் எந்த ஒரு நபரையும் குறிப்பிட்ட நபர்களின் ஆதரவு இருப்பதை வைத்துக்கொண்டு நீக்கக் கூடாது என்பதற்காகத்தான், குறிப்பாக தலைமைப் பதவியான பொதுச்செயலாளர் பதவிக்கு தொண்டர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் எம்ஜிஆர்.

ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி அந்த நிலையை மாற்றி சுயநலத்திற்காக பதவி வெறிக்காகவும் செயல்பட்டுள்ளார். துரோகம் செய்தவர்களுக்கு மக்களும், தொண்டர்களும் விரைவில் தீர்ப்பு தருவார்கள்.'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT