ADVERTISEMENT

''நெருடலோடும், உறுத்தலோடும் உடன்படுகிறோம்''-விசிக தலைவர் திருமாவளவன்

05:26 PM Apr 26, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தருவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு மட்டும் அழைப்பு விடப்பட்டிருந்தது. அதனால், மதிமுக, விசிக, நாதக, மநீம உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சுமார் 02.30 மணி நேரம் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அதில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டைத் திறக்க திமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிக அனுமதி வழங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது நெருடலாக இருப்பதாகவும், அரசின் இந்த முடிவுக்கு நாங்கள் உறுத்தலோடு உடன்படுகிறோம் என தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், ''கொடூரமான துப்பாக்கி சூடு. மக்கள் சிந்திய ரத்தம் இன்னும் காயவில்லை. அவர்கள் உடலில் தங்கிய வடுக்கள் இன்னும் மறையவில்லை. இது நெருடலை தருகிறது இது உறுத்தலை தருகிறது என்றாலும் கூட ஆக்சிஜன் உற்பத்தி தேவை என அனைத்து அங்கிகரிக்கப்பட்ட கட்சிகள் இந்த முடிவை எடுத்திருக்கும் நிலையில், அந்த நெருடல்களோடும், உறுத்தல்களோடும் அந்த நிலைப்பாட்டுக்கு நாங்கள் உடன்படுகிறோம்'' என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT