Can we open Sterlite? All party meeting chaired by Chief Minister tomorrow!

Advertisment

இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகளில் தொழில் தேவைக்கானஆக்சிஜன் தயாரிப்பைநிறுத்தி மருத்துவத் தேவைக்காக ஆக்சிஜனை அனுப்பிவைக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Can we open Sterlite? All party meeting chaired by Chief Minister tomorrow!

இதனைப் பயன்படுத்திக்கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், எங்களால் தினமும் 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்துதர முடியும். அதனால் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கவேண்டும் என மனு செய்தது.தூத்துக்குடியில்உள்ள வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி தரலாம் என மத்திய அரசு சார்பிலும்உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில்உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையின்போது தமிழகம் சார்பில் முன் வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, இதுகுறித்து நாளை ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.நாளை காலை 9:15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.