ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல் சும்மா விடுமா? தேர்தல் முடிவு குறித்து தமிமுன் அன்சாரி

01:04 PM Dec 11, 2018 | rajavel



மோடிக்கு எதிரான அலை வெளிப்படையாக வீசத் தொடங்கியிருக்கிறது என்று நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்த அவர்:-

ADVERTISEMENT

நடைப்பெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்திருக்கக்கூடிய தீர்ப்பு என்பது நாடு தழுவிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

மிக முக்கியமாக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பின்னடைவு என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பதும் மக்கள் மாற்றத்தை நோக்கி நகருகிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக இருக்கிறது.

நிச்சயமாக இது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதான ஒரு அரையிறுதி ஆட்டத்தைப்போலவே பார்க்க வேண்டியிருக்கிறது.

மிசோரம் என்பது பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள்தான் எப்போதும் முக்கியத்துவம் பெறும். அங்கு கூட காங்கிரஸ் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேபோன்று காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி என்று சொன்னால் அது தெலுங்கானாவாக மட்டும்தான் இருக்க முடியும்.

ஏனென்று சொன்னால் தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவும், ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமின் தலைவரான அசதுத்தீன் ஒவைசியும் முன்னதாகவே வலுவான கூட்டணியை வைத்து பிரச்சாரத்தில் இறங்கியது அவர்களது வெற்றிக்கு மூலக்காரணமாகும். அங்கும்கூட காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும், பாஜக மூன்றாவது இடத்திலும் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு, அதனுடைய நான்கரை ஆண்டு கால மத்திய ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையைத்தான் வெளிக்காட்டுகிறது.

இதனை காங்கிரஸ் கட்சி எவ்வாறு பயன்படுத்திக்கொண்டு எப்படி நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நகரப்போகிறது என்பதை எல்லோருமே கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் நரேந்திர மோடிக்கு எதிரான அலை வெளிப்படையாக வீசத் தொடங்கியிருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஜி.எஸ்.டி. விவகாரம், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, விலைவாசி ஏற்றம், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவைகளின் அநியாய விலையேற்றம், நரேந்திர மோடியினுடைய அதானி, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு ஆதரவான போக்கு போன்றவைகளையெல்லாம் இந்த நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது உறுதியாகிறது. இதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் உணர முடிகிறது.

இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது என்று பாஜகவினர் கூறுகின்றனரே?

தோல்வி அடைந்தவர்கள் எப்போதும் சொல்லக்கூடிய சமாதான வார்த்தைகள் இது.

எல்லாவற்றையும் தாண்டி கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டபோதும், தமிழ்நாட்டில் கஜா புயல் சூறையாடியபோதும் பிரதமர் என்பதை மறந்து நரேந்திர மோடி எவ்வாறு நடந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல் சும்மா விடாதல்லவா?.

இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT