ADVERTISEMENT

தேனியில் விஜய பிரபாகரன் போட்டி?

05:08 PM Mar 02, 2019 | rajavel

ADVERTISEMENT

தேனியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் என்று தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT


தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தமிழகம் முழுவதும் தேமுதிக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். ''நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், காலையில் எழுந்து எங்க அப்பாவை நான் பார்க்கிறேனோ இல்லையோ, எங்க அப்பாவை அனைத்து அரசியல் கட்சியினரும் வந்து பார்க்கின்றனர். கட்சித் தலைவர் என்ன சொல்கிறாரோ அதனை நாம் எல்லோரும் கேட்க வேண்டும். தேமுதிக இருக்கும் அணிதான் வெற்றி பெறும்'' என்று பேசி அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியில் இணைவது என்பது குறித்து கடந்த இரண்டு நாட்களாக விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மதுரை உசிலம்பட்டியில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் ''நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக எப்படி கூட்டணி அமைத்தாலும் தேனி தொகுதியில் விஜய பிரபாகரன் தேமுதிக வேட்பாளராக போட்டியிட வேண்டும். அனைவரும் விஜய பிரபாகரன் வெற்றிக்கு துணை நிற்க வேண்டும்'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT