ADVERTISEMENT

ஆபாச பேச்சு: அதிமுக எம்எல்ஏவின் உருவபொம்மையை எரித்து வி.சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

03:09 PM Apr 18, 2018 | rajavel


ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தொழில்துறை அமைச்சர் சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், சிதம்பரம் பாண்டியன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களை வரவேற்கும் விதத்தில் நகரின் பல இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் வைக்கப்பட்ட பேனரில் முருகுமாறன் படத்தை கடைசியாக போட்டுள்ளனர். இதனை பார்த்த அவரது ஆதரவாளர்கள் வாட்ஸ்அப் மூலம் அவருக்கு தெரியபடுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரமடைந்த முருகுமாறன் பேனர் வைத்த எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் செழியனை தொலைபேசியில் அழைத்து, நான் மாநில அமைப்பு செயலாளர் என் படத்தையே கடைசியில் போட்டுள்ளீர்கள் என காது கூசும் வார்த்தையால் ஆபாசத்துடன் பேசியுள்ளார். மேலும் நான் திருமாவளவனையே பார்த்தவன். என்னை யாரும் ஆட்டமுடியாது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதனை கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்கள் கட்சியில் மரியாதை இல்லை என்பதற்கு எங்கள் தலைவரை அசிங்கபடுத்தியுள்ளார் என்றும், அவரை கண்டித்து போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் புதன் கிழமை சிதம்பரம் கஞ்சிதொட்டி முனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியின் செய்திதொடர்பாளர் திருவரசு தலைமையில் அக்கட்சியினர் 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி முருகுமாறன் உருவ பொம்மையை எரித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து பேனரை வைத்தவர்களில் ஒருவரான பரங்கிப்பேட்டை அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜாங்கத்திடம் பேசியபோது, இது ஒரு சாதாரன பிரச்சனை அவர் பெரிது படுத்திவிட்டார். நாங்க எப்போதும் போல பேனர் அடித்துவிட்டோம். அதனை எங்களிடம் சொல்லியிருந்தால் மாற்றிகொண்டு இருந்திருப்போம். எதற்கு இப்படி ஆபாசமாக பேசுகிறார் என்று தெரியவில்லை என்றார். முருகுமாறன் ஆதரவாளர்களோ, எங்க அண்ணனுக்கு கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பதவி கொடுத்துள்ளது என்று தமிழகத்திற்கே தெரியும். ஆனால் சிலர் அவர் மீதுள்ள காழ்புணர்ச்சியால் அவரை அசிங்கபடுத்தும் விதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த கோபத்தில் இப்படி பேசிவிட்டார். அவரது ஆபாச பேச்சு கண்டிக்கதக்கது. இதில் எதற்கு திருமாவளவனை இழுத்தார் என்று தெரியவில்லை என்கிறனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT