ADVERTISEMENT

வேலூரில் போட்டியிடாதது ஏன்? மக்கள் நீதி மய்யம் சொல்வது என்ன?

06:47 PM Jul 18, 2019 | rajavel

ADVERTISEMENT

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. வேலூர் தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அ.ம.மு.க.வும் போட்டியிடாத நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT


மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல்களின்போது வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பணப்பட்டுவாடா சட்டவிரோதமாகவும், தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் நடைபெற்றதாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது.

பின்னர் இந்திய ஜனாதிபதி அவர்கள் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தால் வேலூருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.



மேற்குறிப்பிடப்பட்ட வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ முடிவுகளோ அடைவதற்கு முன்னரே மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்களின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கின்றது.

இச்சூழலில் மக்களின் நம்பிக்கையினை காப்பது என்பது மிக முக்கியம். எனவே அப்பணிகளில் மக்கள் நீதி மய்யம் முழுக்கவனம் செலுத்தவிருக்கிறது. எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த உத்வேகத்துடன் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கட்சியின் செயற்குழுவால் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT