மக்கள் நீதி மய்யம் கட்சி நடந்த முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களையும் சந்தித்தது. அதில் கணிசமான வாக்குகளையும் அக்கட்சி பெற்றது.

Advertisment

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார் கமல்ஹாசன்.

Advertisment

kamal-haasan

இதனிடையே ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் வெற்றி பெறுவதற்கு சில தேர்தல் யுக்திகளையும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் சில தேர்தல் ஆலோசனைகளை வழங்கியவருமான பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை கேட்கலாம் என்று சிலர் கூறியதையடுத்து, அவரை வரவழைத்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்று விவாதிக்கப்பட்டது.

Advertisment

இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.