ADVERTISEMENT

ராமதாஸ் கூறிய கருத்துக்கு வி.சி.கட்சியின் வன்னியரசு அதிரடி பதில்... சர்ச்சையை ஏற்படுத்திய ராமதாஸ் பேட்டி!

02:47 PM Dec 14, 2019 | Anonymous (not verified)

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா டிசம்பர் 9 ஆம் தேதி தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா வெற்றிபெற்ற நிலையில், நேற்று நள்ளிரவு இந்த சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இது குறித்து ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, கூட்டணி என்றால் ஆதரித்து தான் ஆக வேண்டும். பா ம.கவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலை. நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்தது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை என்றும் ராமதாஸ் பதிலளித்தார்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாஜகவின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக பாமக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது பாமக. பிழைப்புவாதம்,மதவாதம், சாதியவாதம்,சந்தர்ப்பவாதத்தின் அடையாளமாய் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் அய்யா ராமதாஸ் என்றும், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது ஈழத்தமிழருக்கு எதிரானது இல்லை என்று ராமதாஸ் கூறுகிறார். அப்ப இசுலாமியருக்கு எதிராக வாக்களித்ததுன்னு ஒப்புக்கொள்கிறீர்களா? அய்யா என்றும் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.


அதே போல் எழுத்தாளர் அருணனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ் கூறிய பதிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமை மசோதாவை ஆதரித்தோம் என்று கூறும் ராமதாஸ். அந்த தர்மத்திற்காக பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ஒழிப்பு மசோதா வந்தாலும் ஆதரிப்பார் என்று கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT