புகைப்பழக்கம் உள்ளவர்களை கொரோனா மிகக் கடுமையாக தாக்கும்; உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இது 100% உண்மை. புகைப்பழக்கம் உள்ளவர்கள் நோயிலிருந்தும், உயிரிழப்பிலிருந்தும் காத்துக் கொள்ள புகைப்பழக்கத்தைக் கைவிடுங்கள்! #QuitSmoking#WHO
— Dr S RAMADOSS (@drramadoss) May 13, 2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756- லிருந்து 74,281 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293- லிருந்து 2,415 ஆக அதிகரித்துள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், புகைப்பழக்கம் உள்ளவர்களைக் கரோனா மிகக் கடுமையாக தாக்கும்; உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இது 100% உண்மை. புகைப்பழக்கம் உள்ளவர்கள் நோயிலிருந்தும், உயிரிழப்பிலிருந்தும் காத்துக் கொள்ள புகைப்பழக்கத்தைக் கைவிடுங்கள் என்றும், குவைத் நாட்டில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரமேஷ் என்பவர் மூலமாக அங்குள்ள தமிழர்களிடம் பேசினேன். அங்கு வேலை இழந்து வாடும் தொழிலாளர்கள் தமிழகம் திரும்பினாலும் வாழ்வாதாரமின்றி வாட வேண்டியிருக்கும்; தங்களுக்கு அரசின் உதவிகள் வேண்டும் என்று கூறினார்கள் என்றும், அவர்கள் கூறுவது உண்மை தான். வேலை இழப்பால், இதுவரை ஈட்டிய பணத்தையும் செலவழித்து விட்டு, வெறுங்கையுடன் திரும்பும் அவர்களின் உடனடித் தேவைகளுக்காக நிவாரண உதவிகளையும், அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்காக வேலைவாய்ப்பு/தொழில் முதலீட்டு உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.