ADVERTISEMENT

ஏன் மீன்குழம்பு வைத்த சட்டியைக் கழுவி பொங்கல் வைக்கணும்... ரஜினி பேச்சுக்கு வி.சி.கட்சியின் ரவிகுமார் எம்.பி பதிலடி!

12:14 PM Mar 13, 2020 | Anonymous (not verified)

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘’எனது அரசியல் பற்றி மக்களுக்கு ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கவே, எனது அரசியல் செயல்பாடுகள் குறித்து விளக்கவே இன்று நான் செய்தியாளர்களை சந்திக்கிறேன். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நான் சந்தித்ததில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பேசுகிறேன்.நான் 25 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அது தவறு. 2017ஆம் ஆண்டில் இருந்துதான் நான் அரசியலுக்கு வருவதாக சொல்லி வருகிறேன்.

ADVERTISEMENT



மேலும் 1996ஆம் ஆண்டில் இருந்து அரசியலை தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தேன். நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது என்று கூறிவந்தேன். 2017ம் ஆண்டில் அரசியல் நிலையற்ற தன்மை உருவாகியிருந்ததால் சிஸ்டம் கெட்டுப்போயிருக்கிறது. முதலில் சிஸ்டத்தை சரி செய்யவேண்டும் என்று சொன்னேன். அரசியல் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். ஏன் அப்படிச் சொன்னேன் என்றால், மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதே பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்தால் நன்றாக இருக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT


இந்த நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஏன் மீன்குழம்பு வைத்த சட்டியைக் கழுவிவிட்டு பொங்கல் வைக்கவேண்டும்? புதிதாக ஒரு பாத்திரத்தில் வைக்கலாமே! இவரது திட்டத்தை சோதித்துப் பார்க்க ஏன் ஒரு நாட்டை இவர் உருவாக்கக்கூடாது? என்றும், கட்சித் தலைமைக்கு ஒருவர் ஆட்சித் தலைமைக்கு ஒருவர் என்பது இந்திய அளவில் காலகாலமாய் இருப்பதுதானே? மன்மோகன்சிங் பிரதமர்,சோனியா காங்கிரஸ் தலைவர். மோடி பிரதமர், நட்டா பாஜக தலைவர். மாநிலங்களிலும்கூட அப்படி இருக்கிறது என்றும், தன்னை ஆதரித்து ஆளாக்கிய தமிழ்நாட்டுக்கு நன்றிக் கடன் செலுத்த அவர்கள் தந்த புகழையே பயன்படுத்தலாம் : 1960களில் நிகழ்ந்ததைப்போலவே இப்போதும் மத்திய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.தமிழக நலன்களுக்காக திரு ரஜினிகாந்த் குரல் கொடுக்கலாம்" என்றும் குறிப்பிட்டு கருத்து கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT