ADVERTISEMENT

அமித்ஷா பச்சை பொய் கூறுகிறார்... முஸ்லீம்களின் குடியுரிமையை பறிக்க தான்... விசிக கட்சி எம்.பி. ரவிக்குமார் அதிரடி கருத்து! 

12:09 PM Feb 29, 2020 | Anonymous (not verified)

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடத்தாது என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தமிழக அரசிடம் கூறிவருகின்றனர். மேலும் டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இதனையடுத்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, குடியுரிமை சட்ட திருத்தத்தால் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மம்தா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். அவர்கள் ஏன் பொய் கூறி வருகின்றனர்? குடியுரிமை சட்ட திருத்தம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி வருகின்றன என்று கூறினார். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேர்ந்தவரும், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யான ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பச்சை பொய்யை கூசாமல் சொல்கிறார். அஸ்ஸாமில் 5 லட்சம் முஸ்லீம்களின் குடியுரிமையை பறிப்பதற்குத்தானே இந்த சட்டத் திருத்தம்? என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT