Skip to main content

அமித்ஷா மீது பெண் எம்.பி பரபரப்பு புகார்! அரசியல் கட்சியினர் அதிர்ச்சி!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில் அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் பல்வேறு கட்சியில் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை பாஜக தங்கள் கட்சியில் இணைத்து கொண்டுவருகின்றனர்.  இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் ராஜ்யசபா  எம்பியாக ஜார்னா தாஸ் என்ற பெண் எம்.பி உள்ளார். இவர் தன்னுடைய மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் என்ற வகையில் புகார் அளிக்க அமித்ஷாவை சந்தித்தார். 
 

mp



இந்த சந்திப்பின்போது தனது மாநிலத்தில் நடந்த வன்முறைகள் குறித்து உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்போது அந்த பெண் எம்.பி.யிடம் நீங்கள் பாஜக கட்சிக்கு மாறி விடுங்கள் என்றும் அமித்ஷா கூறியதாகவும், அதனை தான் மறுத்துவிட்டு, நான் திரிபுரா பிரச்சினைகளைப் பற்றிப் பேச உள்துறை அமைச்சர் என்ற முறையில் தான் உங்களை சந்தித்தேன் என்றும், உங்களை பாஜக தலைவராக சந்திக்க வரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் எங்கள் கட்சி கொள்கை  வேறு உங்கள் கட்சியின் கொள்கை வேறு, உங்களை எதிர்க்கின்ற வரிசையில் முதல் ஆளாக நான் இருப்பேனே தவிர உங்கள் கட்சியில் சேர மாட்டேன் என்று கூறி விட்டதாகவும் ஜார்னா தாஸ் தெரிவித்துள்ளார். அமித்ஷா மீது பெண் எம்பி ஒருவர்  குற்றச்சாட்டு கூறியுள்ளது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் வரும் பிரதமர்; ட்ரோன்கள் பறக்க தடை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சேலம் வருவதையொட்டி நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, வையப்பமலை வழியாக சேலம் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகையை ஒட்டி 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

'60 ஆண்டுகால வெறுப்பு இருக்கிறது' - பாமக அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'There is 60 years of hatred' - Pamaka Anbumani Ramadoss interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 'பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டின் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்த முடிவுக்குப் பிறகு 60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான ஒரு சூழல் இருக்கிறது. மக்களுக்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும் கூட்டணி. பிரதமர் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்றார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று சேலத்தில் நடக்க இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் தற்போது கூட்டணியில் இணைந்துள்ள பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.