ADVERTISEMENT

புலமைப்பித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ மற்றும் ஜெயக்குமார்! (படங்கள்)

03:41 PM Sep 08, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரான பாடலாசிரியர் புலமைப்பித்தன் (வயது 86) உடல்நலக்குறைவால் காலமானார். அவர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (08/09/2021) காலை 09.33 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

புலமைப்பித்தன் சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘குடியிருந்த கோயில்’ படத்தில் இடம்பெற்ற 'நான் யார் நான் யார்...' என்ற பாடலை எழுதியவர் புலமைப்பித்தன். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பல்வேறு பாடல்களை எழுதி புகழ் பெற்றார். குறிப்பாக, ‘இதயக்கனி’ படத்தில் இவர் எழுதிய 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற...' என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது. கடந்த 2015ஆம் ஆண்டில் நடிகர் வடிவேலு நடித்த 'எலி' படத்திற்காக தனது கடைசி பாடலை எழுதியிருந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மதிமுக தலைவர் வைகோ, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கவிஞரும், மக்கள் நீதி மய்ய பிரமுகருமான சினேகன் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT