ADVERTISEMENT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்! 

10:13 AM Jan 29, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கூட்டணி பங்கீடு குறித்தும் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று (29.01.2022) நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சரும், துணைப் பொதுச் செயலாளருமான க.பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மணி, திமுக மத்திய மாவட்ட செயலாளரும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான நா. புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன் உள்ளிட்ட பலர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT