ADVERTISEMENT

தேர்தல் புறக்கணிப்பு போர்டை வைத்துள்ள தூத்துக்குடி கிராம மக்கள்

02:56 PM Apr 03, 2019 | manikandan


எல்லையில் பளிச்சினு தெரியும் தோ்தல் புறக்கணிப்பு போர்டை பார்த்து அரசியல் கட்சிகள் வந்த வழியை திரும்பி செல்கின்றனா். எங்களுக்கு இலவசம் வேண்டாம் உங்க வாக்குறுதியும் தேவையில்லை. 20 ஆண்டு காலமாக உள்ள எங்க கோரிக்கை ஓன்றை நிறைவேற்றி தந்தால் போதும் என்று தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட எழுவரை முக்கி ஊராட்சிக்குட்பட்ட தாய்விளை கிராம மக்கள் ஊா் எல்லையில் தோ்தல் புறக்கணிப்பு என்ற போர்டை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த தாய்விளை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சோ்ந்த 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அரசியல் கட்சிகளுக்கு இப்படி ஒரு கிராமம் இருப்பது தோ்தல் வரும் போதுதான் தெரியும். அதுபோல்தான் ஆட்சியாளா்களுக்கும் அதிகாரிகளுக்கும் இப்படி ஓரு கிராமம் இருப்பதே தொரியாது அந்தளவுக்கு இந்த கிராமத்தையும் மக்களையும் புறக்கணித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த கிராம மக்கள் தற்போது வைத்து இருக்கும் கோரிக்கை நியாய விலை கடை ஓன்றுதான். தினக்கூலியினராக இருக்கும் இந்த மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 6 கி.மீ தூரம் செல்ல வேண்டியிருக்கு இது அந்த மக்களுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவா்கள் அந்த பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை ஓன்றை கேட்டு அதிகாரிகளுக்கு மனு கொடுத்து 20 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

அதேபோல் தோ்தல் நேரத்தில் வந்து செல்லும் கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற்ற உடனே நியாய விலை கடையை ஊருக்குள் கொண்டுவருவேன் என்று வாக்குறுதிகளை கொடுத்து ஓட்டுகளை வாங்கி செல்வதோடு அதனை கண்டுகொள்வதே கிடையாது. இ்ப்படி அரசியல் வாதிகளாலும் அதிகாரிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வரும் தாய்விளை கிராமத்தினர் இந்த தோ்தலை புறக்கணிப்பதாக கூறி போ்டை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT