ADVERTISEMENT

தினகரன் எடுத்த அதிரடி முடிவு! அமமுக கட்சியினர் அதிர்ச்சி!

04:35 PM Jul 09, 2019 | Anonymous (not verified)

நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படு தோல்வியை சந்தித்தது. இதனால் அமமுக கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அமமுக கட்சிக்கு அலுவலகம் கொடுத்த அக்கட்சியின் அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையாவும் விலகி அதிமுகவில் இணைந்தார். இதனால் தினகரன் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிலையில் தினகரன் பேசும் போது, சுயநலத்தோடு சிலர் வெளியே சென்றிருப்பதால் அமமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. உண்மையான தொண்டர்கள் கட்சியை வழிநடத்துவார்கள். ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்தவர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் இன்றைக்கு அனைவரும் ஒன்றுதிரண்டு மேலும் சிறப்பாக கட்சியை வழிநடத்துவார்கள். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தோம். கட்சியை பதிவு செய்துவிட்டு தேர்தலில் நிற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. கட்சியை பதிவு செய்துவிட்டு, புதிய சின்னத்தில், நிலையான சின்னத்தில் போட்டியிடலாம் என்று முடிவு செய்தோம். ஆகையால் வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறினார்.

மேலும் இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என்று தெரிவித்தார். தினகரனின் இந்த முடிவு பற்றி பற்றி அக்கட்சியினரிடம் விசாரித்த போது, இந்த முடிவு தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி இருக்கும் சூழலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு ஒரு கணிசமான வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் இப்படி போட்டியிடாமல் விலகுவதால் கட்சியின் பலவீனத்தை மேலும் அதிகரிப்பது போல் ஆகிவிடும் என்றும் இது மற்ற கட்சியினருக்கு சாதகமாக அமைய வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். மேலும் நம்ம என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் மக்கள் பார்வையில் பயந்து போய் தேர்தலில் போட்டியிடவில்லை என்று நினைக்க வழிவகுக்கும் என்றும் ஆதங்கப்பட்டனர். இருந்தாலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று தினகரன் அறிவித்து இருப்பதால் வாக்கு வங்கியை நிரூபிக்க உதவும் என்றும் அக்கட்சியின் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT