ADVERTISEMENT

99.9 சதவீதம் எங்களுக்குத்தான் கிடைக்கும்: டிடிவி தினகரன்

03:01 PM Mar 25, 2019 | rajavel


ADVERTISEMENT

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கட்சி பதிவு செய்யப்படாததால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் குக்கர் சின்னத்திற்கு பதிலாக வேறு எதாவது சின்னம் அமமுகவிற்கு அளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்தார்.


அப்போது குக்கர் சின்னம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் எங்களுக்கு உரிமை இருப்பதால்தான் அமமுகவை பதிவு செய்யவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை என்பதை உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் சின்னம் கேட்கவில்லை. உச்சநீதிமன்றத்தில்தான் கேட்கிறோம்.

நாளை அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 99.9 சதவீதம் எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கும். தமிழக மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு எந்த சின்னத்திலும் வாக்களிப்பார்கள். இந்த தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத் தன்மை எப்படியானது என்பதை இந்திய, தமிழக மக்கள் புரிந்துள்ளனர்.

அமமுகவை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே உத்தரவு இருக்கிறது. மக்கள் சரியாக பார்த்து எங்கள் சின்னம் எது என்பதை அறிந்து வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள். இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT