ADVERTISEMENT

“அது உண்மைதான்... நான் இல்லைன்னு சொல்லலயே...” - எடப்பாடி பழனிசாமி

03:13 PM Mar 30, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சட்டப்பேரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழகத்தில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா தாராளமாக புழக்கத்தில் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்களில் ருசியாக சமைத்துக் கொடுத்தோம். அதற்கான பொருட்களை தடையில்லாமல் கொடுத்தோம். ஆனால் இப்பொழுது அம்மா உணவகங்களில் ஆட்களைக் குறைத்து விட்டார்கள். கொடுக்கின்ற பொருளையும் குறைத்து விட்டார்கள். அதனால் தரம் இல்லாத ஒரு ருசி இல்லாத உணவு கொடுப்பதால் அங்கு வருகை குறைந்து கொண்டு வருகிறது. அதை அரசாங்கத்திடம் சொன்னால் ஆதாரம் கொடுங்கள் என எங்களிடம் கேட்கிறார்கள். நாங்கள் போய் சாப்பிட்டால் தான் ஆதாரம் கொடுக்க முடியும். பத்திரிகைக்காரர்கள் எல்லாம் போய் சாப்பிட்டு பாருங்க. நீங்கள் சொன்னால் தான் நம்புவார்கள். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் தவறான தகவலை வெளியிட்டிருக்கிறார்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் அதிமுக-பாஜக கூட்டணியில் இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்ப, ''நான் இல்லை என்று சொல்லவில்லையே. ஆரம்பத்திலிருந்து அண்மையில் முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரையும் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தது. இன்னும் கூட்டணியில் தான் இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியோடு தான் பயணம் செய்துகொண்டிருக்கிறோம் இதுவரை...” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT