ADVERTISEMENT

“நடைப்பயணம் மேற்கொண்டால் தான் லட்சணம் தெரியும்” - திருச்சி சூர்யா அட்டாக்

03:51 PM Feb 12, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஓரிரு தினங்கள் முன் வரிச்சூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நான் காதல் செய்து கொண்டிருக்கிறேன். ஜாலியா இருக்கிறேன். எல்லாத்தையும் காதலிக்கிறேன். உங்களையும் காதலிக்கிறேன். இந்த மக்கள் எல்லாத்தையும் காதலிக்கிறேன். நான் ஒரு பப்புக்கு போறேன். நான்கு நடிகர்கள் வந்து என்கூட ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பாவம் அந்த காயத்ரி ரகுராம். ஒரு நாள் ஓட்டலில் சாப்பிடுவதற்காக போனேன். மாஸ்டர் கணேஷ், ஒரு ஐந்து ஆறு பேர் வந்திருந்தார்கள். வந்தபோது என் கூட ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். அப்புறம் திருச்சி சூர்யாகிட்ட பேசினேன். அவர் என்கிட்ட சாரி கேட்டாரு. நான் தெரியாமல் பதிவு போட்டுவிட்டேன் என்றார். ஏம்ப்பா இப்படி எல்லாம் போடலாமா? அந்த பொண்ணு யாருன்னே தெரியாது. ஃபோட்டோ தான் எடுத்தது. இது குத்தமாய்யா. அவங்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சாமி. அரசியல்வாதிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்'' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சூர்யா, “பாஜகவில் மறுபடியும் சேர அழைப்பு வந்ததா என கேட்கிறார்கள். மார்ச் இறுதியில் இடைநீக்க காலம் முடிகிறது. கட்சியின் வளர்ச்சி, அண்ணாமலையின் உழைப்பு சிலரால் வீணாகிறது என்று தான் சொன்னேன். என் கருத்தை நான் வெளிப்படுத்திவிட்டேன். அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்காததும் டெல்லியின் வேலை. கட்சியில் நிலவும் அதிருப்தியால் வளர்ச்சி தடைப்படுகிறது அதை தெளிவுபடுத்தியுள்ளேன். அவர் வெளியில் போனால் தான் நான் கட்சிக்குள் வருவேன் என சொல்ல முடியாது.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பு குறிப்பிட்ட காலம்தான். அண்ணாமலையின் காலத்திற்கு பிறகு வேறு தலைவர் வரும்பொழுது கட்சியில் இருக்கமாட்டீர்களா என கேட்கிறார்கள். 2026 வரை அண்ணாமலை தான் நீடிப்பார். 2026ல் தமிழகத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அப்பொழுது இவர் முதலமைச்சராக இருப்பார் என்றுதான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன். முதல்வர் ஆகிவிட்டால் அவரது மாநிலத் தலைவர் பொறுப்பு அத்துடன் முடிந்து விடாது. அடுத்த 25 வருஷத்திற்கு தமிழ்நாட்டிற்கு அவர்தான் தலைவர்.

அண்ணாமலையின் பி டீம் ஆக நீங்கள் இருக்கிறீர்களா என கேட்கிறார்கள். அண்ணாமலையின் ஏ டீம் தான் நான். அவரது மெயின் டீம் நாங்கள் தான். காயத்ரி ரகுராம் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். நடைப்பயணம் போகப் போகிறேன். பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறேன் என்கிறார். போக வேண்டியது தானே. லட்சணம் என்ன என்று தெரிந்துவிடுமே. அப்பொழுது தான் உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று தெரியும். அண்ணாமலையை மட்டும் விமர்சனம் பண்ணிக்கொண்டு இருந்தால் உங்களால் என்ன சாதித்து விட முடியும்” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT