ADVERTISEMENT

"சமக தனிச் சின்னத்தில் போட்டி" - சரத்குமார் அறிவிப்பு!

11:25 PM Mar 03, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார், முதன்மை துணைப் பொதுச் செயலாளரும், மகளிர் அணி மாநிலச் செயலாளருமான ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு மாநில துணைப் பொதுச்செயலாளரான சுந்தர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சரத்குமார், "தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் தன்பலம் அறியவும், வாக்கு விகிதாச்சாரத்தைத் தெரிந்துகொள்ளும் பொருட்டும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம். இந்தத் தேர்தலில் எங்கள் அணி கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற்று யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை நிர்ணயிக்கும்; நிச்சயமாகச் சொல்கிறேன். இந்தத் தேர்தலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு எதிரொலிக்கும். ராதிகா மற்றும் கட்சி நிர்வாகிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவார் என்பது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என்றார்.

தொடர்ந்து, மறவன்மடம் பகுதியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் 6- வது பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, வேளச்சேரியில் ராதிகா போட்டியிடுவார் என்று கொள்கைப் பரப்புச் செயலாளர் விவேகானந்தன் அறிவித்தார். எங்களின் மூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளர் கமல்தான் என்றார் சரத்குமார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT