ADVERTISEMENT

திருப்பத்தூர் மாவட்டம் – அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்.

11:55 AM Mar 11, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் மட்டும் பாமக போட்டியிடுகிறது. அதிமுக போட்டியிடும் தொகுதிகளும், அதன் வேட்பாளர்களும்.

ADVERTISEMENT

ஆம்பூர் – நஜர்முகம்மத். நகர்மன்ற துணைத் தலைவராக இருந்தவர். கட்சியில் சிறுபான்மை அணியில் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாணியம்பாடி – செந்தில்குமார். ஆலங்காயம் ஒன்றியச் செயலாளராக உள்ளார். சிட்டிங் எம்.எல்.ஏவும், அமைச்சருமான நிலோபர் கபிலுக்கு பதில் இவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீரமணி

ஜோலார்பேட்டை – வீரமணி. 2011 முதல் இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக அமைச்சராக உள்ளார். மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

டி.கே.ராஜா

ஒரு தொகுதியில் பாமக போட்டியிடுகிறது.

திருப்பத்தூர் - டி.கே.ராஜா. இந்த தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ இருந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். கட்சியில் மாநில துணைச் செயலாளர்களுள் ஒருவராக உள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT