ADVERTISEMENT

வாக்காளர்களின் கை, கால்களை கட்டி தூக்கி வாருங்கள்! - எடியூரப்பா சர்ச்சை பேச்சு

12:50 PM May 06, 2018 | Anonymous (not verified)

வாக்காளர்களின் கை, கால்களைக் கட்டி தூக்கி வாருங்கள் என எடியூரப்பா பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வருகிற மே 12ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல் ஆளும் காங்கிரஸ் அரசு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், பாஜக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முன்னாள் முதல்வரும், பாஜக முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா கட்சி ஊழியர்களிடம், ‘ஓய்வெடுத்துக் கொள்ளாதீர்கள். யாராவது தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று உங்களுக்குத் தெரிந்தால், அவர்கள் வீட்டிற்கு சென்று கை, கால்களைக் கட்டி வாக்குச்சாவடிகளுக்குத் தூக்கிவாருங்கள். பின்னர் அவர்களை கிட்டூர் தொகுதி பாஜக வேட்பாளர் மகந்தேஷ் தொட்டகவுடாருக்கு வாக்களிக்கச் செய்யுங்கள்’ என சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசினார்.

எடியூரப்பாவின் இந்த பேச்சு ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் விதமாகவும், வாக்காளர்களை அச்சுறுத்தும் விதமாகவும் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கெனவே, எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு பாஜக சீட்டு ஒதுக்காத நிலையில், பாஜக உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு கோரிவரும் நிலையில், எடியூரப்பாவின் இந்த பேச்சு மேலும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT