ADVERTISEMENT

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது... -திருமாவளவன்

12:04 PM Jun 17, 2019 | kamalkumar

"ஒரு நாடு, ஒரு தேர்தல்" குறித்து ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜூன் 19ம் தேதி நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


இதுகுறித்து அனைத்து கட்சிதலைவர்களுக்கும், நாடாளுமன்றத் துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி கடிதம் எழுதியுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 20ஆம் தேதி, இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இவ்வாறு கூறினார். “நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவையும், நேரத்தையும் குறைக்கும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம். மேலும் இரட்டை தலைமை குறித்த கேள்விக்கு, இரட்டை தலைமை என்பதை டெல்லி தலைமை மற்றும் தமிழக தலைமை என எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT