ADVERTISEMENT

"திமுகவில் உட்கட்சிப்பூசல் தலைவிரித்தாடுகிறது" - கோவை செல்வராஜ்.

03:21 PM Nov 16, 2019 | Anonymous (not verified)

2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் எனவும், திமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுவதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பேட்டி.

ADVERTISEMENT

ADVERTISEMENT


கோவையில் பத்திரிகையாளர் மன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, "அதிமுக 2021 ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து முதலமைச்சராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் மகத்தான வெற்றியும் பெறுவோம். நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலின் தோல்வியில் இருந்து மு.க ஸ்டாலின் இன்னும் மீளவில்லை, தமிழகத்தில் தற்போது அரசியல் வெற்றிடம் இல்லை. சினிமா துறையில் தான் வெற்றிடம் உள்ளது.

எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பிறகு தமிழக சினிமா துறையில் தொடர்ந்து வெற்றிடம் உள்ளது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சியே தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழக அரசால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த கட்ட நகர்வு நீதிமன்றத்தின் கையில் உள்ளது.


அதிமுக வின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் தொண்டர்கள் சம்மதத்தோடு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்திக்க உள்ளோம். அதிமுக தற்போது தெளிவான தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிமுக விற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தல் தோல்வியில் இருந்து இன்னுன் மீளவில்லை, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஸ்டாலின் அச்சம் கொள்கிறார். மேலும், திமுகவிற்குள் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. அதனால் இந்த தேர்தலை தள்ளிப்போட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார் என்று கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT