ADVERTISEMENT

“தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதி டார்கெட்..” - எல். முருகன்

12:59 PM Apr 02, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் பழமை வாய்ந்த அப்பன் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உட்பட பாஜகவினர் தரிசனம் செய்தனர்.

இந்தநிகழ்வை முடித்துக்கொண்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை விமானநிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அதேபோல், அதிமுக எஸ்.பி.வேலுமணியும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், “நேற்று நான் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்தது வழக்கமான நடைமுறைதான். அமைச்சர் என்ற முறையில் அந்தச் சந்திப்பு நடைபெற்றது. அதிமுக பாஜக கூட்டணி குறித்து பத்திரிகையாளர்களுக்கு தான் சந்தேகம் உள்ளதுபோல் எனக்கு தோன்றுகிறது. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது என நமது உள்துறை அமைச்சரும், எங்கள் மாநிலத் தலைவரும் அதனை சொல்லியிருக்கிறார். எங்கள் கூட்டணி கட்சித் தலைவர் அதிமுக தலைவரும் இதனை சொல்லியிருக்கிறார். இதேபோல், திமுக கூட்டணியிலும் சலசலப்புகள் உள்ளன, அதனால் இந்தக் கேள்வியை திமுகவிடமும் கேட்டால் நன்றாக இருக்கும் என்பது என் வேண்டுகோள்.

எங்கள் நிர்வாகிகள் கூட்டத்தில் சிலவற்றை பேசுவது வழக்கம். எங்கள் மாநிலத் தலைவரின் கருத்து என்னவென்றால், கட்சி இன்று வளர்ந்துக்கொண்டிருக்கிறது என அவர் பேசியிருப்பது சர்ச்சைக்குரிய விஷயமாக நான் கருதவில்லை. அவரும் நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.

பாராளுமன்ற பிரவாஸ் என்பது கட்சித் தலைமை ஒரு 150 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளார்கள். அதில் வெற்றி பெற வேண்டும் எனத் திட்டம் தீட்டியுள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து ஒன்பது தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT