ADVERTISEMENT

உச்சநீதிமன்ற தீர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு... -கே. பாலகிருஷ்ணன்

06:41 AM Aug 12, 2020 | rajavel

ADVERTISEMENT

பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது, பாராட்டுகிறது என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து கூட்டுக் குடும்ப சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்கிற திருத்தம் 2005இல் இந்து வாரிசு சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. 2005க்கு முன்னாலேயே தந்தை இறந்துபோன குடும்பங்களுக்கும் இது பொருந்துமா என்கிற கேள்வியோடு போடப்பட்ட வழக்குகளில் கடந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று சற்று முரண்பட்டு இருந்தன. தற்போதைய தீர்ப்பில், திருத்தம் 2005-ல் வந்திருந்தாலும் அதற்கு முன்னரே தந்தை இறந்துபோன குடும்பங்களிலும் பூர்வீக சொத்தில் பெண் வாரிசுகளும் சமமான பங்குதாரரே என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. பெண்களுக்கு அவர்களுடைய பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட நெடுங்காலமாக கோரி வந்துள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கினை சட்டமாக்கிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதன்மை பாத்திரம் உண்டு. 1989ல் திமுக ஆட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சூழலில் பூர்வீக சொத்துடமையில் பெண் வாரிசுகளுக்கான சம பங்கை பின் தேதியிட்டு உறுதிப்படுத்தி இருக்கக்கூடிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது, பாராட்டுகிறது" இவ்வாறு கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT