ADVERTISEMENT

ராகுல்காந்தி உறுதியாக உள்ளார்: திருநாவுக்கரசர் பேட்டி

09:49 AM Jun 17, 2019 | rajavel

ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சு.திருநாவுக்கரசர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியளார்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது, தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை பேரிடர் பாதிப்பாக கருதி மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். தமிழக அரசு கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதை அறிந்து முன்கூட்டியே நிதி ஒதுக்கி மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டும். முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் ஓரளவு சமாளித்து இருக்கலாம்.



காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல்காந்தி உறுதியாக இருக்கிறார். ஆனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர் கள் அவர் தலைவராக நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதை தொடர்ந்து வற்புறுத்துவோம்.

2 முறை வெற்றி பெற்றாலே இந்தியாவை மோடிக்கு மக்கள் எழுதி தந்துவிட்டதாக கூற முடியாது. 3 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான். 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.


நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக பேசக்கூடிய பலமான தலைவர் ராகுல்காந்தி தான். மக்கள் விரும்புகின்ற கட்சிக்கு தகுதியான தலைவர் ராகுல்காந்தி தான். தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் என்றால் வேறு மாநிலத்தில் இருந்து தலைவர்களை இறக்குமதி செய்ய முடியுமா?. இவ்வாறு தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT