ADVERTISEMENT

“வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிட அருண் நேருவுக்கு வாக்களியுங்கள்” - சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ

02:18 PM Apr 16, 2024 | ArunPrakash

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் கல்லக்குடியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

அப்போது சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது; தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 3 ஆண்டுகளில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆலோசனைப்படி லால்குடி சட்டமன்றத் தொகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான லால்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள், லால்குடி, புள்ளம்பாடி ஒன்றிய பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம், திருமங்கலம் பகுதியில் தடுப்பணை பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

ரூ.300 கோடிக்கான திட்டங்களில் லால்குடி தாலுகா அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக இடம் ஆகியவை கையகப்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. லால்குடி தொகுதியில் 4 உயர்மட்ட பாலங்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. லால்குடி நகராட்சி பகுதியில் புதிய மின்மயான பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம், நந்தியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கல்லக்குடி நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புள்ளம்பாடி பேரூராட்சியில் புதிய கழிவுநீர் வடிகால் வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புள்ளம்பாடியை மையமாக வைத்து புதிய தாலுகா அலுவலகம் உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு லால்குடி தொகுதியில் ரூ.300 கோடிக்கும் மேற்பட்ட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண்நேருவை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பேசினார்.

இதில் புள்ளம்பாடி ஒன்றியக்குழு தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் வடிவேலு, ஆலம்பாடி முருகன், செந்தாமரை கண்ணன், ராஜமாணிக்கம், வக்கீல் சேவியர், கல்லக்குடி நிர்வாகிகள் குமார், சையதுஒலி, அம்பேத்கர், காங்கிரஸ் பிரமுகர்கள் அடைக்கலராஜ், அடைக்கலம், வி.சி.க. நிர்வாகி விடுதலை இன்பன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT