ADVERTISEMENT

“யார் போராடுறாங்க என்பது பெரிதல்ல; எதுக்காக போராடுறாங்க என்பதே முக்கியம்..” - செல்லூர் ராஜூ அதிரடி 

12:27 PM Dec 14, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

“பாஜக போல் அடிக்கடி போராட்டங்கள் நடத்தி மக்களைத் தொந்தரவு செய்ய அதிமுக விரும்பவில்லை” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக அமைப்பு தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்றுக்கொண்டார். இதில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுக கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்ற ராமதாஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “பாமக கூட்டணியிலிருந்து விலகிவிட்டது. அவர்கள் விலகிய பின் பேசும் கருத்துகளுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். பாமகவினர் பேசுவதற்கு அதிமுக தலைவர்கள் பதில் சொல்வார்கள்" என்றார்.

பாஜக எதிர்க்கட்சி போல செயல்பட்டு அடிக்கடி போராட்டங்கள் நடத்துவதாக பாஜகவினர் சொல்லும் கருத்தைக் குறித்த கேள்விக்கு, "பாஜக வளரும் கட்சி என்பதால் அடிக்கடி போராட்டங்கள் நடத்துகிறார்கள். யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது பெரிதல்ல; என்ன காரணத்திற்காகப் போராடுகிறார்கள் என்பதே முக்கியம். எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கிற போராட்டமாக இருக்க வேண்டும். அடிக்கடி போராட்டம் நடத்தி மக்களைத் தொந்தரவு செய்ய அதிமுக விரும்பவில்லை" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT