Even if we stand alone in Tamil Nadu, we will win 60 seats - BJP Murugan interview

பா.ஜ.க தலைவர் எல்.முருகன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பா.ஜ.க தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறுவோம்.தனித்து நின்றாலும் எந்தச் சிக்கலும் இல்லை. யார் வேண்டுமானாலும் பா.ஜ.கவில் இணையலாம். ஆனால் அதன்பிறகு அவர்கள் எப்படிப் பணியாற்றுகிறார்கள்என்பதே முக்கியம். மும்மொழிக் கொள்கையில் யாரும் அரசியல் செய்யக் கூடாது. தற்பொழுது வரை அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணிசிறப்பாக உள்ளதுஎன்றார்.

Advertisment

அண்மையில்அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் திராவிட கட்சிகள் மீதுதான் தேசிய கட்சிகள் சவாரி செய்ய முடியும்.பா.ஜ.கடெல்லிக்குராஜாவானாலும் இங்குபிள்ளைதான் எனக் கூறியிருந்தார்.இதற்கு ஹெச்.ராஜா போன்றவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பா.ஜ.க தலைவர் முருகன்இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisment