ADVERTISEMENT

துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி அல்ல... திருக்குறள் வைத்திருப்பவன்தான் அறிவாளி... சீமான் 

04:53 PM Jan 29, 2020 | rajavel

ADVERTISEMENT

திருக்குறள் வைத்திருப்பவன்தான் அறிவாளி என்றும், துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி அல்ல என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ADVERTISEMENT



மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே எதிரானது. அண்டை நாட்டில் இருந்து வருவோரை அகதிகளாக பார்க்க வேண்டுமே தவிர, சட்ட விரோத குடியேறிகளாக கருதக்கூடாது. தஞ்சை பெரியக் கோவிலில் தமிழில் குடமுழக்கு நடத்த வேண்டும் என்பது பண்பாட்டு புரட்சி போராட்டம் போல் உருவாகி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழக்கும், பூஜைகளும் நடத்தப்படும் வரை இந்தப் போராட்டம் நீடிக்கும். மாநில உரிமை, தன்னாட்சி குறித்து தற்போதைய ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைளில் வித்தியாசம் இல்லை.


துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி. துக்ளக் படித்தால் அறிவாளி என்றால் நீட் தேர்வு படிப்பவர்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே? அந்தப் புத்தகத்தை வாங்கி உங்கள் ரசிகர்களுக்கெல்லாம் கொடுங்கள். அவன்தான் உங்கள் படம் வரும்போதெல்லாம் தரையில் சோறு போட்டு சாப்பிடுகிறான். நாங்க தட்டில் சாப்பிடும்போதே கண்ட கண்ட நோயெல்லாம் வருகிறது. அவன் தரையில் போட்டு தின்றுகொண்டிருக்கிறான்.

துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி அல்ல. திருக்குறள் வைத்திருக்கும் தமிழன் தான் அறிவாளி. திருவள்ளுவனை படிக்கிறவன்தான் அறிவாளி. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு பேசினார்.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT