சமீபத்தில் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதனையடுத்து சீமான் தன்னை மூன்று ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக கூறினார். பின்பு சீமானுடன் பிறந்தநாள் கொண்டாடும் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு நாம் தமிழர் கட்சியினரை பற்றி நடிகை விஜயலட்சுமி கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார்.

Advertisment

seeman

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில், சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் சந்தித்த போது, சமீபகாலமாக நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறிவருகிறார் அது பற்றி உங்க கருத்து என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு சீமான், இதுவரை நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினேன். இப்போது இதுபோன்ற கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது என கோபமாக அந்த இடத்தை விட்ட நகர்ந்தார். சீமான் தனது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களையும் வெளிப்படுத்திவிட்டு எனது சாவுக்கு காரணம் சீமான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.