ADVERTISEMENT

கோபம் வருமா வராதா? எத்தனை நாளைக்கு சகித்துக்கொள்வது? ரஜினியை போட்டுதாக்கும் சீமான்

11:14 AM Apr 15, 2019 | rajavel

ADVERTISEMENT

நக்கீரன் இணையதளத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு பேட்டி அளித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து நீர் மேலாண்மை பற்றி உங்கள் கட்சி பேசுகிறது. சமீபத்தில் பேசிய ரஜினி, நதிநீர் இணைப்பு பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. பாஜக ஆட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால் அதனை சாத்தியப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?



இது ஒரு ஏமாற்று. ஏரி, குளம், ஊரணி, கிணறு நாம் உருவாக்கியது. ஆறுகளை நாம் உருவாக்கவில்லை. அதனை உருவாக்கியது அருவி. அது தனக்காக பாதை கண்டு ஓடியது. எங்கு மேடு, எங்கு பள்ளம் என அதற்கு ஏற்ப ஓடியது. அதனை இணைப்பது என்பது முட்டாள்கள் கூடி முடிவெடுப்பது போன்ற செயல்.





ஆறுகளை அதன் போக்கில் ஓடவிட்டு, தேவையென்றால் அதன் பக்கத்தில் சேமித்துக்கொள்லாமே தவிர, அதன் போக்கை திருப்பக்கூடாது. உடலில் ரத்த நாளங்கள் போல, பூமியின் ரத்த நாளங்கள் ஆறுகள். அதனை இங்கு திருப்புவேன் அங்கு திருப்புவேன் என்பதா? ஒரு சாதாரண ரோடு போடுவதற்கே பல காடுகளை அழிக்கிறோம், மலைகளை அழிக்கிறோம். அதனை எதிர்த்தே போராடிக்கொண்டிருக்கிறோம். ஆறுகளை திசை திருப்புகிறேன் என்றால் எவ்வளவு லட்சக்கணக்கான காடுகள், மலைகள், விவசாய நிலங்கள், உயிரிழனங்களை அழிக்கணும். ஒரு அறிவும் இல்லாமல் நதிகளை இணைக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.

நதிகள் எங்கு இணையாமல் இருக்கிறது. மனங்கள்தான் இணைய மறுக்கிறது. காவேரி ஒரே நதியா. மூன்று நதியா. ஒரே நதிதான். ஏன் எனக்கு தண்ணீர் வரவில்லை. உங்களுக்கு நதிநீர் சிக்கல் இருக்கிறது. நீங்கள் முதல் அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்படும்போது காவிரி பற்றி என்ன சொல்கிறீர்கள் என்றால் பதில் இல்லை. ஆகையால் நதிகளை இணையுங்கள் என்கிறார். காவிரியோட எந்த நதியை இணைப்பார்கள். அவரை சொல்ல சொல்லுங்கள். காவிரி இணைய மறுத்ததா? தர மறுக்கிறான். 150 டிஎம்சி தண்ணீர் தர மறுப்பவனை இணையலாம் என்றால் துண்டாக போய்விடமாட்டானா? எங்களை அடித்து விரட்டிக்கொண்டிருப்பவனிடம் நதிகளை இணைக்கலாம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வானா? எங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டால் நதிகள் இணைப்புக்கு பேச்சே இருக்காது.


ஓயாம இதையே பேசிக்கொண்டிருப்பது. நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக சொன்னார். இது சாத்தியமில்லை என்று அப்பவே சொன்னோம். ஒரு புகழ் பெற்ற கலைஞன், புரிந்து பேச வேண்டும். சம்மந்தம் இல்லாமல் பேசக்கூடாது. நாங்கள் எவ்வளவு நீர் மேலாண்மை குறித்து கொடுத்துள்ளோம். எவ்வளவு ஆக சிறந்த திட்டங்களை கொடுத்திருக்கிறோம். அதைப்பற்றியெல்லாம் பேசாமல் பாஜகவை பற்றி மட்டும் பேசுவது என்ன இது. அது தேவையில்லாததுதானே உங்களுக்கு.



நீங்க ஷீட்டிங் போறீங்கன்னா, ஷீட்டிங்தான் போகணும். நடிக்கப்போறீங்கன்னா, நடிக்கத்தான் போகணும். நதிநீரை இணைக்கணுமுன்னா இணைத்துக்காட்டுங்கள் பார்ப்போம். மக்களை ஏமாற்றும் வேலை. என்னை முட்டாள் என்று நினைத்து பேசிக்கொண்டிருக்கக்கூடாது. அப்போ கோபம் வருமா வராதா. எத்தனை நாளைக்கு சகித்துக்கொள்வது. ஒரு கோடி கொடுப்பதாக சொன்னீர்கள். எங்கு கொடுத்தீர்கள். ஒரு கோடியை வைத்து ஒரு கிலோ மீட்டர் நதியை இணைத்துவிடலாமா. இதையெல்லாம் ஒரு நகைச்சுவை நடிகர் கூட பேசக்கூடாத ஒன்னு. இதனை ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர் இப்படி பேசிக்கொண்டு அலையலாமா? இயற்கையை நேசிப்பவன், இயற்கையை படிப்பவன் இதனை எப்படி பார்ப்பான். அப்படி பார்ப்பதுதான் விமர்சிக்கிறது என்று ஒன்றும் இல்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT