ADVERTISEMENT

சசிகலாவின் திடீர் கோவில்பட்டி பயணம், விறுவிறுப்படைந்த அமமுகவினர்..!

03:15 PM Mar 30, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்டார் தொகுதியான கோவில்பட்டியில், அமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்திலிருந்து விடுதலையான சசிகலா, அதிமுகவைக் கைப்பற்றுவார் என்கிற அதிரி, புதிரி தகவல்கள் றெக்கை கட்டின. ஆனால் எதிர்பார்த்த அந்தக் காரியம் நடக்கவில்லை.

சைலண்ட் ஆன சசிகலா, கரோனா காரணமாக யாரையும் சந்திக்காமலிருந்தார். மேலும் மன அமைதிக்காக கோவில், கோவிலாகவும் சென்று வழிபடுகிறார். நேற்றைய தினம் (29.03.2021) தஞ்சாவூரிலிருந்து கிளம்பிய சசிகலா, ராமேஸ்வரம் ஆலயம் சென்று வழிபட்டார். பின்னர் திடீர் பயணமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு வந்தார். இங்கேதான் அவரது சகோதரி மகனான டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இங்கு அவர் வந்த தகவலறிந்த அ.ம.மு.க. கட்சியினர் பெருமளவில் திரண்டனர். தாரை தப்பட்டையுடன் வரவேற்பளித்தனர். அவர்களிடம் பேசாமல் வரவேற்பை ஏற்றுக்கொண்ட சசிகலா, அங்குள்ள புகழ்பெற்ற செண்பகவல்லி அம்பாள் சமேத பூவநாத சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் 11.40 மணியளவில் மதுரை புறப்பட்டுச் சென்றார். அவரோடு தஞ்சாவூர் பட்டர் மற்றும் டாக்டர் வெங்கடேசும் வந்திருந்தனர்.

எதிர்பாராத திருப்பமாக டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிற கோவில்பட்டி தொகுதிக்கு சசிகலா வந்தது பேசுபொருளாகியது. மேலும் அ.ம.மு.க.வினர் தரப்பில் கள வேலைகள் விறுவிறுப்படைந்திருக்கின்றன. மும்முனைப் போட்டியில் களம் தகிக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT