ADVERTISEMENT

சலசலப்புகளுக்கு மத்தியில் சசிகலா வருகை... இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இன்று திடீர் ஆலோசனை! 

07:40 AM Feb 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து விடுவிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு சசிகலா தமிழகம் வருவார் என டி.டி.வி.தினகரன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட, போஸ்டர், பேனர் வைத்த அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று (05.02.2021) தென்காசியில் திருமலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்த டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “தீயசக்தி திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார். டிஜிபியிடம் அல்ல, முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.” என்றார்.

இப்படி பல்வேறு அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில் வருகிற 8-ஆம் தேதி திங்கள்கிழமை சசிகலா சென்னை வரவுள்ள நிலையில், அதிமுகவினர் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுடன் மாலை 5 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT