ADVERTISEMENT

பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டுவது கடினம்; இன்ஸ்டன்ட் முடிவெடுத்த இபிஎஸ் தரப்பு

05:24 PM Feb 03, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது நேற்று தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்தது. அந்த உத்தரவில் 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். அதற்காக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். வேட்புமனுவில் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால் தேர்தல் ஆணையம் அதை தற்காலிகமாக அங்கீகரித்து விடப்போகிறது. ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது இந்த பொதுக்குழுவில் செல்லாது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் வேட்புமனு தொடங்கி தற்போது கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கும் நிலையில், அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறைந்த கால அவகாசமே இருப்பதால் வரும் திங்கட்கிழமை அன்று தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர் குறித்து பதிலளிக்க இருப்பதாக இபிஎஸ் தரப்பு முடிவு எடுத்துள்ளது. இடைத்தேர்தலில் வேட்பாளர் யார் என முடிவு செய்ய பொதுக்குழுவை கூட்டாமல் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற முடிவு செய்துள்ளது. காரணம், ஒரு சில தினங்களில் ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டுவது கடினம் என்ற நிலையில், இந்த முடிவினை இபிஎஸ் தரப்பில் எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT