ADVERTISEMENT

ராமதாஸ், அன்புமணி போடும் திட்டம்... அதிர்ந்து போன எடப்பாடி... பாமக மீது கோபத்தில் அதிமுக! 

12:26 PM Nov 14, 2019 | Anonymous (not verified)

அ.தி.மு.க.விடம் இருந்து தங்களுக்கான தொகுதிகளைப் பெறுவதில் பாமகவும் தேமுதிகவும் தெளிவாக இருப்பதுபோல் அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். அண்மையில் தைலாபுரத்தில் ஆலோசனை நடத்திய டாக்டர் ராமதாஸ், இங்கு இருக்கும் 15 மாநகராட்சி மேயருக்கான தொகுதிகளில் நாம் வேலூரையும் சேலத்தையும் வாங்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு அன்புமணி, முதல்வர் எடப்பாடியின் சொந்தத் தொகுதியான சேலத்தை நமக்குத் தருவார்களா? அதனால் சேலத்துக்கு பதிலாக சென்னையைக் கேட்போம் என்று பதில் சொல்லியிருக்கார். சென்னையை பா.ஜ.க.வும் குறி வைத்திருப்பதை சொன்ன ராமதாஸ், உள்ளாட்சியின் அனைத்து நிலைகளிலும் நாம் 20 சதவிகித தொகுதிகளை வாங்கியே தீர வேண்டும் என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இதேபோல் தே.மு.தி.க.விலும் ஆலோசனைகள் நடந்து வருகிறது. அதுவும் சேலம், வேலூர், திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் தங்களுக்கு 2 தேவை என்றும் கூறிவருவதாக சொல்லப்படுகிறது. மொத்தமாக 25 சதவீத உள்ளாட்சி சீட்டுகளை வாங்கிவிடவேண்டும் என்பதும் தே.மு.தி.க.வின் முடிவில் இருப்பதாகவும் கூறுகின்றனர். கடந்த எம்.பி. தேர்தலின் போது பா.ம.க. முந்திக்கொண்டது போல், இந்த முறை சீட் ஷேரிங்கில் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று கட்சிப் பிரமுகர்களிடம் உறுதியான குரலில் சொல்லியிருக்கார் பிரேமலதா. மேலும் மேயர் பதவி விஷயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு கறார் காட்டி வருகிறார் எடப்பாடி என்று கூறுகின்றனர்.அதோடு அதிமுக சீனியர்கள் பலரும் பாமக கேட்பதை கொடுத்தால் மற்ற கூட்டணி கட்சியினரும் கேட்பார்கள்.பிறகு கூட்டணிக்கே ஆபத்து ஏற்படக் கூடிய சூழல் வரும் என்று எடப்பாடியிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT