ADVERTISEMENT

‘ஜென்டில்மேன்’ ஆன கே.டி.ராஜேந்திரபாலாஜி! -பிரச்சாரத்தில் வழக்கமான ஒன்று மிஸ்ஸிங்!

05:55 PM Oct 08, 2019 | kirubahar@nakk…

அதென்னவோ, ரொம்பவே மாறிவிட்டது போல் இருக்கின்றன அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பேச்சும் நடவடிக்கைகளும். கடந்த வாரம், நாடாளுமன்ற சிறப்புரிமைக்குழு மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணிக்கம் தாகூர் எம்.பி., மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறையிட்டார் அல்லவா! அதனாலோ என்னவோ, இந்த மாற்றம். நாங்குநேரி பிரச்சாரத்தில் வழக்கமான அவரது அதிரடி பேச்சைக் கேட்க முடியவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

களக்காடு ஒன்றிய பகுதிகளில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டபோது - “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த இயக்கத்தை மக்கள் போற்றும் மகத்தான இயக்கமாக வழிநடத்தி வருகிறார்கள். அரசின் நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வரும் காலம் இது. எனவே மக்கள் இந்த அரசு மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் ஆட்சி நடக்கிறது. எல்லா சமுதாய மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆட்சியாக எடப்பாடியார் ஆட்சி திகழ்கிறது. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் எடப்பாடியார் அவர்களின் ஆட்சிக்கு அதிகமான ஆதரவு உள்ளது. திமுக ஆட்சியில் நடைபெற்ற ஜாதி கலவரங்கள், மின்வெட்டு, கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு, அரசியல் படுகொலைகள் தமிழக மக்கள் மனதில் இன்றும் கொளுந்துவிட்டு எரிகிறது. எடப்பாடியார் ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து கிடையாது, மின்வெட்டு கிடையாது, ஜாதி கலவரம் கிடையாது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை கிடையாது, கந்து வட்டி கொடுமை கிடையாது, நில அபகரிப்பு கிடையாது. அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

திமுகவை ஒருக்காலும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 2006 முதல் 2010 வரை நடைபெற்ற திமுக ஆட்சியின் அராஜகங்களை அட்டூழியங்களை தமிழக மக்கள் என்றும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். தற்போது எடப்பாடியார் ஆட்சியில் குடி மராமத்து பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. குடிமராமத்துப் பணியின் நாயகனாக எடப்பாடியார் திகழ்கிறார். நாங்குநேரியில் எங்கு பார்த்தாலும் எடப்பாடியார் அலை வீசுகிறது. மதத்தைச் சொல்லி, இனத்தைச் சொல்லி இனி திமுகவால் ஓட்டு கேட்க முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால், இந்தியாவில் வெளிநாடுகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்திருக்கும்.” என்றவர் பேச்சில், வழக்கமான தனிநபர் தாக்குதல் இல்லை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT