ADVERTISEMENT

”மத்தியில் ஆட்சி மாற்றத்தின் மூலம் விவசாயப் பொருட்களின் விலை குறையும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

06:10 PM Apr 11, 2024 | ArunPrakash

தி.மு.க. கூட்டணி கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதுபோல் ஆத்தூர் தொகுதியில் உள்ள முருநெல்லிக்கோட்டை, கரட்டுப்பட்டி, குருநாதநாயக்கனூர், ஜி.நடுப்பட்டி, கே.புதுக்கோட்டை, பண்ணைப்பட்டி, ஸ்ரீராமபுரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்துடன் திறந்த ஜீபபில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

ADVERTISEMENT

அமைச்சரும், வேட்பாளரும் செல்லும் ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் பெருந்திரளாக நின்று ஆரத்தி எடுத்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்து, அமைச்சரையும், வேட்பாளரையும் வரவேற்றனர். அதோடு எங்கள் ஓட்டு அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்குத்தான் போடுவோம் என்று வெளிப்படையாகவே அமைச்சரிடம் கூறினர்.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமியும் பொது மக்கள் மத்தியில் பேசும்போது, “இப்பகுதியில் ஆரம்ப சுகாதாரநிலையம் கட்டித் தரப்படும். அதோடு ஏடி காலனியில் நவீன வசதிகளுடன் ஒருகோடி செலவில் திருமண மண்டபம் கட்டித் தரப்படும். அதுபோல் ரோடு மின்விளக்கு உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கூடிய விரைவில் நிறைவேற்றித் தரப்படும். மத்தியில் ஆட்சி மாற்றத்தின் மூலம் நூறு நாள் வேலை, நூற்று ஐம்பது நாளாக ஏன் இருநூறு நாளாக கூட உயர்த்தப்படும். அதுபோல் கூலியும் நானூறு வழங்கப்படும். சிலிண்டர் விலை ரூ.500க்கு கொடுக்கப்படும். அதுபோல் பெட்ரோல் டீசல் விலையும் குறையும். இப்பகுதியில் உள்ள விவசாய பெருங்குடி மக்களான உங்களுக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதின் மூலம் உரம், பூச்சிமருந்து உட்பட விவசாய பொருட்களின் விலையும் குறையும். ஜிஎஸ்டி எல்லாம் கட்டவும் தேவையில்லை” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT