ADVERTISEMENT

"பாமகவினர் நினைத்து கூட பார்க்கக் கூடாது"...ராமதாஸ் அதிரடி!

02:49 PM Sep 13, 2019 | Anonymous (not verified)

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, பள்ளிக்கரணையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணியை முடித்துக்கொண்டு சுபஸ்ரீ வீடு திரும்பும் போது பள்ளிக்கரணை ரேடியல் சாலையின் நடுவே அனுமதியின்றி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக கட்சி பேனர் ஒன்று, திடீரென சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறிய சுபஸ்ரீ இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிகழ்வு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அடுக்கடுக்காக பல கேள்விகளை பேனர் வைப்பது தொடர்பாக எழுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் இனிமேல் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பாணர் வைக்க கூடாது என்று கூறிவருகின்றனர். அதே போல், பாமக நிறுவனர் ராமதாசும் தனது கட்சியினருக்கு அறிவுரை கூறியுள்ளார். அதில் பாமகவின் நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள், கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்ற எனது ஆணை இன்றும், என்றும் பாமக நிர்வாகிகளால் கடைபிடிக்கப்பட வேண்டும் இந்த விதியை மீறுவது குறித்து பா.ம.கவினர் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் பேனர் வைப்பதை தவிர்ப்போம், நாகரிகத்தை காப்போம் என்றும் கூறியுள்ளார். அதே போல் பேனர்கள் தொடர்ந்து வைக்கப்படுவதற்கு மக்கள் சரியில்லாததே காரணம் என்று டிராபிக் ராமசாமியும் குற்றம் சாட்டியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT