ADVERTISEMENT

அதிமுக பட்ஜெட்டில் இதுவா? ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த ராமதாஸ்... கோபத்தில் திமுகவினர்!

12:55 PM Feb 14, 2020 | Anonymous (not verified)

2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் மீதான உரையை தொடங்கினார். காலை 10 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் மீதான நிதியமைச்சர் ஓபிஎஸ்ஸின் உரையில்,நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 4.56 லட்சம் கோடியாக இருக்கும் என ஓபிஎஸ் தெரிவித்தார். அப்போது தமிழக அரசு பெருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். காவல்துறைக்கு 8,876.57 கோடியும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 405.68 கோடியும், 2020-21 ஆண்டில் சிறைத்துறைக்கு 329.74 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT



தமிழக பட்ஜெட் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர மதுக்கடைகளை திறப்பது அல்ல என்றும், தமிழகத்தில் மதுக்கடை எண்ணிக்கை கூடி விட்டது. படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு என்ன ஆனது? மு.க.ஸ்டாலின்- சரி தான். அதேபோல திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையும் ஒன்று கூடிவிட்டது. மது ஆலைகளை மூடுவதாக 2016-ல் திமுக அளித்த வாக்குறுதி என்னவானது என்பதையும் கேளுங்கள் என்றும் கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸிற்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு, அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்ற பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT