ADVERTISEMENT

இதைவிட நமக்கு தலைக்குனிவு இருக்கவே முடியாது: ப.சிதம்பரம் 

12:39 PM Feb 23, 2019 | rajavel

ADVERTISEMENT

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவான்மியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

அப்போது அவர், சமுதாயம் எப்படி சீர்குலைக்கப்படுகிறது. இந்தியாவின் பலம் என்ன? இந்தியாவின் பலம் நம்முடைய பன்மை தன்மை. எல்லோரும் இணக்கமாக வாழுகின்ற நாடு இந்திய நாடு. இங்கு ஜாதி இருந்தது, இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை. அது இந்தியாவுக்கென்று உள்ள சாபக்கேடு. ஆனால் இந்த ஜாதி வேறுபாடுகளை கடந்து இந்தியாவில் ஒரு பன்முகத்தன்மை, பன்மை தன்மை இருந்தது.


கடைசியாக இந்தியாவை பிரித்து ஆண்டது ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள். பாஜக அரசு அதைத்தானே செய்கிறது. பிரிதாளுகிறது. இந்து வேறு, இஸ்லாமியர்கள் வேறு, கிருஸ்துவர்கள் வேறு. இந்தியாவில் பிறந்தவர்களெல்லாம் இந்துக்களாக இருக்க வேண்டும். இது பிரித்தாளும் சூழ்ச்சியா இல்லையா? நரேந்திர மோடி ஏறத்தாழ 35 ஆண்டுகள் பிரச்சாரகராக இருந்தார். அவர் பிரதமராக வந்த பிறகு பேசிய பேச்சுக்கள்தான் உங்களுக்கு தெரியும். அவர் பிரச்சாரகாரராக இருந்தபோது எப்படி பேசினார் என்று தெரிய வேண்டும் என்றால், இப்போது உத்திரப்பிரதேச முதல் அமைச்சராக இருக்கிறாரே யோகி ஆதித்யநாத் என்ன பேசினாரோ அதைத்தான் பேசினார்.

35 ஆண்டுகள் மோடி பேசிய பேச்சுக்கள், எப்படிப்பட் பேச்சு, என்ன பேச்சு, என்ன கருத்துக்கள் என்று உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் இன்று யோகி ஆதித்யநாத் பேசியதை கேளுங்கள். என்ன சொல்கிறார். இந்த நாட்டிலே ஜாதி வேண்டும். ஜாதிதான் இந்த நாட்டை வழிமுறைப்படுத்துகிறது. இதனால்தான் இந்தியா பிழைத்திருக்கிறது என்று ஒரு முதல் அமைச்சர் சொல்கிறார். இந்த பூமி பெரியாரும், காமராஜரும் பிறந்த பூமி என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த சனாதனா தர்மத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சி ஏற்றுக்கொள்கிறது என்பது எனக்கு புரிகிறது.

பாஜகவுக்கு அப்பால் தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு அரசியல் தலைவர், ஒரு அரசியல் கட்சி மேடையிலே வந்து பகிரங்கமாக சொல்ல வேண்டும், பெரியார் பிறந்த பூமியில், காமராஜர் பிறந்த பூமியில், அண்ணா பிறந்த பூமியில் நாங்களும் சனாதனா தர்மத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லட்டுமே?

நான் ஜாதியை மறுப்பவன், எதிர்ப்பவன். ஆனால் என்னுடைய எதிர்ப்பால், என்னுடைய மறுப்பால் ஜாதி ஒழிந்துவிடும் என்று நான் நம்பவில்லை. ஒருவேளை ஜாதி ஒழியும் என்ற நம்பிக்கையிலே ஜாதியை எதிர்க்கிறேன். ஜாதியை மறுக்கிறேன்.

ஆனால் ஜாதி வேண்டும், ஜாதி வேற்றுமைதான் இந்த நாட்டை வழிமுறைப்படுத்துகிறது, ஜாதி வேறுபாடுதான் இந்த நாட்டை ஒழுங்குமுறைப்படுத்துகிறது என்று சொல்லக்கூடிய ஒரு கட்சி தமிழ்நாட்டில் காலூன்றி விட்டால், அதைவிட நமக்கு தலைக்குனிவு இருக்கவே முடியாது. தமிழகத்திலும் காலூன்ற முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சிக்கு துணை போகிறது அதிமுக. அதைவிட கேவலம் அந்த முயற்கிகு துணைபோகிறது பாமக. இவ்வாறு பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT