ADVERTISEMENT

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா: ஓ.பி.எஸ். பங்கேற்பு..!

01:24 PM May 07, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்றனர்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் கலந்துகொண்டனர். மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சி சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு, அமைச்சர்களுக்கு அடுத்தபடியான முதல் வரிசியில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT