ADVERTISEMENT

ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜாவுக்கு கரோனா! தொற்று பரவியது எப்படி?

07:40 PM Jun 29, 2020 | rajavel

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ்-ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதைக்கண்டு சுகாதாரத்துறையினர் நகரிலுள்ள பல பகுதிகளுக்கு சீல் வைத்தும், ஊரடங்கு உத்தரவும் கடுமையாகக் கடைப்பிடித்தும் வருகிறார்கள். அதனாலேயே துணை முதல்வர் ஓபிஎஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி வந்தும் கூட கரோனா பீதியால் பெரியகுளம் செல்லாமல் போடியில் வீடு எடுத்து தங்கினார்.

ADVERTISEMENT

ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா தேனி மாவட்ட ஆவின் தலைவராக இருந்து வருகிறார். அவருடைய வீடும் ஓபிஎஸ் பழைய வீடு அருகிலேயே இருக்கிறது. இந்த நிலையில் பெரியகுளத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை கண்டு சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வந்தனர். அதுபோல் ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ.ராஜாவுக்கும் சுகாதாரத் துறையை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் நான்குமுறை தொடர் பரிசோதனை செய்தும்கூட கரோனா தொற்று இல்லை என (NEGATIVE) வந்தது. இருந்தாலும் பெரியகுளம் நகர் பகுதியில் கரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதை கண்ட ஓ.ராஜா இனிமேல் இங்கே இருக்கக்கூடாது என மாமனார் ஊரான போடி அருகே இருக்கும் போடேந்திரபுரத்திற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு குடும்பத்துடன் போய் தங்கியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் நேற்று சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை செய்தனர். அப்போது சுகாதாரத் துறையினர் ஓ. ராஜா வீட்டுக்கும் சென்று கரோனா பரிசோதனை செய்தபோது ஓ.ராஜாவுக்கு கரோனா (POSITIVE) இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைக்கண்டு ஓ.ராஜா அதிர்ச்சி அடைந்துவிட்டார். உடனே ஓ.ராஜாவை மதுரைக்கு அழைத்துச் சென்று, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டதின் மூலம் ஓ. ராஜாவுக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அதே மருத்துவமனையில் ஓ. ராஜாவின் மனைவியும் கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே போடேந்திரம்புரம் முழுவதும் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி அடித்து ஓ. ராஜாவுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி வருகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT