ADVERTISEMENT

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் செய்த செயலால் மீண்டும் அதிமுகவில் சர்ச்சை... அதிருப்தியில் எடப்பாடி!

10:50 AM Nov 29, 2019 | Anonymous (not verified)

சிகாகோ உலகத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் பேசிய ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், நான் மோடியின் பூமியில் இருந்து உங்களை சந்திக்க வந்திருக்கேன் என்று பெருமிதமாக பிரகடனம் செய்தார். இது எடப்பாடிக்கு வாட்ஸ்ஆப் வீடியோவாக அப்போது சென்றுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெ. பெயர்களை மீறி மோடி பெயரைச் சொல்லி, டெல்லியைக் கவர கணக்குப் பண்ணுவதைப் பார்த்து அப்பா மேலேயும் மகன் மேலேயும் எடப்பாடி டென்ஷனாயிட்டதாக அப்போது கூறிவந்தனர். அதே போல் முதலில் நான் ஒரு இந்து என்று மதத்தை குறிப்பிட்டு பேசியதும் அதிமுகவில் மட்டுமில்லாமல் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT



இந்த நிலையில் தனது லெட்டர் பேடில் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார் எம்.பி ரவீந்திரநாத். அந்த கடிதத்தின் மேல் பகுதியில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம் பெற்றுள்ளது. அதிமுகவில் இருந்து தேனி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் லெட்டர் பேடில் மோடியின் படம் இடம் பெற்று இருப்பதை பார்த்து அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரதமரையும், பாஜகவையும் ஈர்க்கவே ஓபிஎஸ்ஸும், அவரது மகனும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி ஓபிஎஸ் மகன் செயலால் அதிமுகவில் சர்ச்சை ஏற்பட்டு வருவதால் எடப்பாடியும் கடுப்பில் இருப்பதாக சொல்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT