ADVERTISEMENT

சமுக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு பூமி பூஜை நடத்திய அமைச்சர் (படங்கள்)

05:39 PM May 18, 2020 | rajavel

ADVERTISEMENT

கரோனா வைரஸ் விவகாரத்தில் சமுக இடைவெளி என்பது பொதுமக்களுக்கு மட்டும்தான் அதிகாரிகளுக்கோ, அமைச்சர்களுக்கோ, அதிமுகவினருக்கோ இல்லை என்பதை உறுதிபடுத்தும் விதமாக அமைந்திருந்தது அமைச்சர் ஓ.எஸ்.மணியனும், மாவட்ட ஆட்சியரும் கலந்துகொண்ட பூமி பூஜை நிகழ்வு ஒன்று.

ADVERTISEMENT


நாகப்பட்டினம் மாவட்டம் புத்தாகரம் முடிகொண்டான் ஆற்றில் பழுதடைந்ததுள்ள புத்தகரம் நீர்த்தேக்கத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகளுக்கான பூமி பூஜையை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனும், நாகை ஆட்சியர் பிரவின்நாயரும் முன்னின்று பூஜையை நடத்தி வேலையை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சமூக இடைவெளி என்பது காற்றில் பறக்க விடப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் அங்கு குவிந்திருந்தனர். கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் என வழிபாட்டு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறக் கூடாது என அரசு உத்தரவு போட்டு வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடியுள்ள நிலையில் நாகை மாவட்டத்தில், குடிமராமத்து பணிகளை துவங்க யாகம் வளர்த்து பூமி பூஜை நடத்தியதுடன், அதில் நூற்றுக்கும் மேற்பட்டோரை கலந்து கொள்ளவைத்த நிகழ்வு அரசு உத்தரவை கேலி கூத்தாக்குவதாகவே அமைந்துள்ளது. அதோடு சட்டத்தை காக்க வேண்டிய ஆட்சியர் பிரவின் நாயரும் அதிமுக பொறுப்பாளரைப்போல பூஜையில் கழுத்தில் மாலையோடு கலந்துகொண்டது பொதுமக்களை முனு முனுக்கவே செய்தது.


பூமி பூஜைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், மற்றும் நீர் ஒழுங்கிகள் உள்ளிட்ட 1,829 குடிமராமத்து பணிகள் செய்வதற்காக, தமிழக அரசு சுமார் 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. யாருக்கு கரோனா இருக்கிறது என்று சர்க்கரை நோய் அல்லது பி.பி. இருந்தால் மட்டுமே கரோனா பரிசோதனை செய்யமுடியும், நலமுடன் இருக்கின்ற எல்லோருக்கும் பரிசோதனை செய்யமுடியாது என்று கூறி முடித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT