தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான நிலோஃபர்கபில் மற்றும் அவரது குடும்பத்தார்க்கு கரோனா வந்தது. இதனால் அவர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனை சிகிச்சைமற்றும் தனிமை ஒய்வுக்குப் பின்பு அமைச்சர் நிலோஃபர்கபில், ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டுக்கு வருகை தந்தார். அப்படி வந்தவருக்கு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், கட்சியினர் பூங்கொத்து தந்து வரவேற்றனர்.
அப்படி வரவேற்கும் வைபோகத்திலும் சமூக இடைவெளி பின்பற்றாமல் அதிகாரிகள், கட்சியினர் நின்றது அந்த வழியாகச் சென்ற பொதுமக்களை அதிருப்தியடைய செய்தது. இப்போ தான் சிகிச்சை முடிந்து வர்றாங்க, இப்பவும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கலன்னா என்ன அர்த்தம் எனக் கேள்வி எழுப்பினர்.