ADVERTISEMENT

கார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு!

05:47 PM Aug 24, 2019 | Anonymous (not verified)

ப.சிதம்பரம் கைதான விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பரபரப்பா ஆக்கியிருக்கு. இந்த நடவடிக்கையை ப.சி.யோடு நிறுத்தாமல் அவர் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் கம்பி எண்ண வைக்கணும்னு மோடி அரசு வரிஞ்சிகட்டி நிக்கிது. அடுத்து ப.சி. மகன் கார்த்தி சிதம்பரத்தைக் குறிவைச்சிட்டாங்கனு டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ப.சி.யை குறி வச்ச ஐ.என். எக்ஸ் மீடியா கேஸ் சம்பந்தமா ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தை அரெஸ்ட் பண்ணி, விசாரிச்சி, ரிமாண்ட்ல வச்சி, ஜாமீன்ல வந்துட்டாரு. ஆனாலும், வேற என்னென்ன வழக்கு இருக்குன்னு தோண்டுறாங்க.

ADVERTISEMENT



இதில் வருமான வரித்துறை சம்பந்தமான ஒரு வழக்கு இப்ப கார்த்தி சிதம்பரத்தையும் அவர் மனைவி ஸ்ரீநிதியையும் ஒருசேர மிரட்டிக்கிட்டு இருக்கு. இவங்க பேர்ல கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காட்டுல இருந்த ஒரு நிலம் விற்கப்பட்டிருக்கு. அதில் விற்பனைத் தொகையைக் குறைச்சிக் காட்டி, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா இவங்க மேல வருமான வரித்துறை தொடுத்த ஒரு வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துக்கிட்டிருக்கு. இதற்கிடையில் இப்ப கார்த்தி சிதம்பரம் எம்.பி.யாகி இருப்பதால், அவர் மீதான இந்த வழக்கை, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அவசரமாக மாற்றியிருக்கு மோடி அரசு. இந்த சிறப்பு நீதிமன்றம்தான், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீதான ஒரு கிரிமினல் வழக்கில் அவருக்குத் தண்டனை கொடுத்து, அவருடைய மந்திரி பதவிக்கு வேட்டு வச்சிது.

ADVERTISEMENT


அதனால் இந்த சிறப்பு நீதிமன்றம் தன்னைச் சிறைக்கு அனுப்பிடுமோன்னு பயந்து போன கார்த்தி சிதம்பரம், அந்த வரி ஏய்ப்பு வழக்கு என் மீது தொடரப் பட்ட காலத்தில், நான் மக்கள் பிரதிநிதியாக இல்லை. அதனால் இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது'ன்னு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கார். இதற்கு விளக்கம் தருமாறு வருமான வரித்துறைக்கும் உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கு. இருந்தாலும் கார்த்தி சிதம்பரம் தலைக்குமேல் ஒரு கூர்மையான கத்தி தொங்கிக்கிட்டுதான் இருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT