ADVERTISEMENT

''ஸ்டாலினின் துபாய் பயணம் முதலீட்டை ஈர்க்கவா... குடும்பத்திற்கு புதிய தொழில் துவங்கவா?''-இபிஎஸ் விமர்சனம்!

12:35 PM Mar 27, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதல்வர் தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் செல்லவில்லை மாறாக அவரது குடும்பத்திற்கு தொழில் துவங்க அங்கு சென்றுள்ளதாக தெரிகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சனம் செய்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''துபாய்க்கு சென்று தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகவும், அங்கு கண்காட்சி அரங்கைத் துவக்கி வைப்பதற்கும் முதல்வர் சென்றார் என்றால் அது சரி, ஆனால் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை ஒரு குடும்ப சுற்றுலாவாக தான் மக்கள் பார்க்கிறார்கள். தனி போயிங் விமானத்தை எடுத்து குடும்ப உறுப்பினர்களை அந்த விமானத்தின் மூலமாக துபாய்க்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதற்கு முன்பாகவே ஸ்டாலினுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். துபாய் சென்றது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா இல்லை அல்லது குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்குவதற்கா என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். மக்களுடைய பார்வைக்கு அப்படித்தான் தெரிகிறது. ஏனென்றால் இவர் மட்டும் போயிருந்தால் பரவாயில்லை. அந்தத் துறையைச் சேர்ந்த செயலாளர் போயிருந்தால் பரவாயில்லை. அந்தத் துறையின் அமைச்சர் போயிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் குடும்பமே துபாய்க்கு செல்கின்ற பொழுது மக்களுக்கு நன்மை செய்ய, தமிழ்நாட்டுக்கு தொழில் துவங்க அங்கே செல்லவில்லை துபாய்க்கு சென்றது அவரது தனிப்பட்ட காரணத்திற்காக தான் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இவர்கள் அங்கே புதிய தொழில் தொடங்குவதற்காக சென்றதாக மக்கள் பேசிக் கொள்வதை எங்களால் கேட்க முடிகிறது. சர்வதேச வர்த்தக கண்காட்சி துவங்கப்பட்ட நாள் 1.10.2021. முடியும் தேதி 31.3.2022. இன்னும் நாலு நாட்களில் கண்காட்சி முடிய இருக்கிறது. முடியும் தருவாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் சார்பாகச் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாட்டின் சார்பில் அரங்கம் அமைத்து துவக்கி வைப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் 4 நாட்களில் முடிய போகுது. இதை ஒரு சாக்காக வைத்து துபாய் செல்வதற்கு இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நான் வெளிநாடு சென்ற பொழுது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பாருங்கள் (டேப் ஒன்றை எடுத்து செய்தியாளர்களிடம் காண்பித்தார். அதில் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றது குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசும் வீடியோ ஒளிபரப்பானது) நாங்கள் வெளிநாடு சென்ற பொழுது எல்லாரும் பயணிக்கக்கூடிய விமானத்தில் பயணம் செய்தோம். அந்தந்த துறை செயலாளர்கள் வந்தார்கள், துறை அமைச்சர்கள் வந்தார்கள்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT